தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. சூர்யா, அஜித், விஷால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப் போட்டு நடித்த சமீரா ரெட்டி, திடீரென திருமணம் செய்துக் கொண்டு சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். ஆனால், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படம், பதிவுகள் போட்டு ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.
'குட்டி தேவதையாக பெண் குழந்தை' - சமீரா ரெட்டிக்கு குவியும் வாழ்த்து! - sameera reddy blessed with girl baby
டெல்லி: குட்டி தேவதை போல் பெண் குழந்தை பிறந்திருப்பதாகத் தனது இன்ஷ்டாகிராம் பக்கத்தில் பிரபல நடிகை சமீரா ரெட்டிக்கு பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் தாய்மையை போற்றும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சமீரா ரெட்டி, நீச்சல் குளத்தில் எடுத்தப் பல புகைப்படங்கள் வைரலானது. தனது தாய்மை பருவத்தினை மகிழ்ச்சியுடன் கழித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனக்குக் குட்டி தேவதை போல் பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கு நன்றியும் தெரிவித்து தனது இன்ஷ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சமீரா ரெட்டி. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.