தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியாக நடித்துவரும் சமந்தா திருமண விவாகரத்திற்குப் பிறகு பல புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் தற்போது பன்னாட்டு அளவில் தயராகும், 'Arrangements Of Love' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். Timeri N Murari எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிவருகிறது.
பாஃப்டா விருதுபெற்ற ஹாலிவுட் இயக்குநர் பிலிப்ஜான் இயக்கவுள்ள இப்படத்தை 'ஓ பேபி' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பில் சமந்தா, இருபால் ஈர்ப்பு (BISEXUAL) கொண்ட பெண்ணாக நடிக்கவுள்ளார்.