தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இன்ஸ்டாவில் 10 மில்லியன் ஃபாலோயர்கள் - நடாலி போர்ட்மேன் வழியில் கொண்டாடிய சமந்தா - சமந்தா இன்ஸ்டாகிராம் 10 மில்லியன் ஃபாலோயர்கள்

பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா, இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றுள்ளதைக் கொண்டாடும் வகையில் 10 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்து உதவியுள்ளார்.

சமந்தா
சமந்தா

By

Published : May 28, 2020, 10:55 AM IST

பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு தேர்ந்தெடுத்த படங்களில் மட்டும் கவனம் செலுத்தி சமீபகாலமாக நடித்து வருகிறார்.

இருந்தபோதிலும், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் பதிவேற்றி தன் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வந்த அவர், தற்போது 10 மில்லியன் ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராமில் பெற்றுள்ளார். இந்நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக 10 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்து சமந்தா பதிவிட்டுள்ளார்.

மேலும், பிரபல ஹாலிவுட் நடிகை நடாலி போர்ட்மேனைப் பின்பற்றி, தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

”நான் 10 மில்லியன் நபர்கள் கொண்ட குடும்பத்தை சம்பாதித்ததை கொண்டாடும் வகையில், நடிகை நடாலி போர்ட்மேனைப் பின்பற்றி 10 அற்புதமான தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கியுள்ளேன். லவ் யூ” என அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க :ரஜினியை தொடர்ந்து டிஸ்கவரியில் நுழைந்த பிரகாஷ் ராஜ்

ABOUT THE AUTHOR

...view details