தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில், இடைவிடாமல் நடித்து வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாகத் தெலுங்கில் வெளியான ஜானு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், நடிகை சமந்தா சமீபத்தில் பிரபல ஊடகத்திற்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நீங்கள் எதற்காகப் பயப்படுவீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
"திரைப்பட கதையை தேர்வு செய்யும்போது பயப்படுவேன்"- சமந்தா - Latest cinema news
நடிகை சமந்தா தான் ஒரு திரைப்பட கதையை தேர்வு செய்யும்போது மிகவும் பயப்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.
சமந்தா
அதற்கு, "நான் ஒரு விஷயத்திற்காகப் பயப்படுவேன். ஒரு திரைப்படத்தின் கதையை என்னிடம் கூறினால் அதைச் செய்ய முடியுமா? முடியாதா? என்று நான் அச்சப்படுவேன். ஏனென்றால் அப்போதுதான் என்னுடைய நடிப்பைச் சரியாக வெளிப்படுத்துவேன். அதனால்தான் ஒவ்வொரு முறையும் நான் திரைப்படத்தின் கதையைத் தேர்வு செய்யும்போது பயப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.