தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் சினிமாவில் துணை நடிகையாக வாழ்க்கையை தொடங்கி விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால், ஆகியோருடன் நடித்து முன்னணி நடிகையானார். அதேபோன்று தெலுங்கு சினிமாவில் மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் ஆகியோருடன் நடித்து பிரபலமானார். சினிமாவில் பெண்களுக்கான கதைக்களம் குறைவாக இருந்த போதும், தனக்கு கிடைக்கும் வேடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நிலையான இடம்பிடித்துள்ளார்.
ஸ்பெயினுக்கே சமந்தாதான் 'குயின்' - வைரலாகும் புகைப்படம்! - SPAIN
கணவருடன் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள சமந்தா தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த போதே 2018 அக்டோபர் மாதம் 6ஆம் தேதி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு சமந்தா தனது செகண்ட் இன்னிங்சை தொடங்கி நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சமந்தா புகைப்படம் எடுத்துக்கொள்வதில் அலாதி ஆர்வம் கொண்டவர். திருமணம் ஆனாலும் தனது சினிமா வாழ்க்கை பாதித்து விடக்கூடாது என்பதற்காக போட்டோ சூட் நடத்தி தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். ரசிகர்களும் சமந்தாவை கடுமையாக விமர்சிப்பதும் உண்டு.
இந்நிலையில், தனது கணவருடன் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருக்கும் சமந்தா, கவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவருடன் நாக சைதன்யாவும் உடனிருக்கிறார். தற்போது இந்தப் புகைப்படம் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமந்தா 60 வயது பாட்டியாக நடித்துள்ள 'ஓ பேபி' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.