சமந்தா - நாக சைதன்யா இருவரும் 2017ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமண வாழ்வில் கிசுகிசுக்கப்புகள் ஏதுமின்றி வாழ்க்கை நடத்திவந்த நிலையில், கடந்த சில வாரங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவருவதாக தகவல்கள் வெளியாகின.
அதன்படியே செப்.2ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்த நிலையில் நடிகை சமந்தா இன்று புகைப்படத்துடன் ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் "பழைய காதலின் பாடல்கள். மலைகளிலும் குன்றுகளிலும் வீசும் குளிர்காற்று. தொலைந்துபோன பாடல் வரிகள். மனச்சோர்வின் எதிரொலி" எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்தாண்டு இதே நாளில் அவர், "நீ எனக்கானவன் நான் உனக்கானவள், எந்த கதவு வந்தாலும் அதை நாம் ஒன்றாக திறப்போம் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் கணவா" என்று நாக சைதன்யா குறித்து பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சமந்தா சர்ச்சையில் ஆமிர் கான், சித்தார்த்