பவர் ஸ்டார் பவன் கல்யாணின் 28ஆவது படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஹரிசங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துவரும் படம் PSPK 28. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 2020 செப்டம்பர் 2ஆம் தேதி இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்தியா கேட், சுபாஷ் சந்திர போஸ், வல்லபாய் படேல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
தற்போது இப்படத்தில் சமந்தா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பவன் - சமந்தா கூட்டணியில் 2013ஆம் ஆண்டு வெளியான ‘அத்தாரிண்டிகி தாரேதி' மாபெரும் வெற்றி கண்டது. அதேபோல் இயக்குநர் ஹரிசங்கர் - பவன் கூட்டணியில் வெளியான ‘கப்பர் சிங்’ படமும் ப்ளாக்பஸ்டராக அமைந்தது. எனவே இவர்கள் மீண்டும் இணையும் இப்படத்துக்கு பவன் கல்யாண் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க:எம்எஸ்வி, கண்ணதாசன் - போற்றிப் பாடிய கமல்ஹாசன்