திரைத்துறையின் நட்சத்திர ஜோடிகளான சமந்தா, நாக சைதன்யா ஜோடி சனிக்கிழமை (அக்.2) திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இவர்களின் பிரிவைக் கண்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஏமாற்றுபவர்கள் ஒருபோதும், முன்னேற மாட்டார்கள் என்று சிறுவயதில் பள்ளி ஆசிரியர் ஒருவர் சொல்லிக் கொடுத்துள்ளார். உங்களுக்கு எப்படி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சித்தார்த்தும், சமந்தாவும் காதலித்து வந்ததாகவும், கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. அதனை மனதில் வைத்துத் தான் சித்தார்த் மறைமுகமாக இந்த பதிவை வெளியிட்டு இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் சமந்தா ரசிகர் ஒருவர் சித்தார்த் பதிவு குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் , " ஒரு முற்போக்கான நபராகவும், பெண்ணியவாதியாகவும் நீங்கள் எவ்வளவு காலம் முகமூடி அணிந்திருப்பீர்கள்? சமந்தா மட்டுமில்லை, யாரும் உங்களுடன் இருக்கமுடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ள வேண்டும் - சமந்தா ஸ்டோரி