தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரூ.200 கோடி ஜீவனாம்சம் வேண்டாம்... சமந்தா கண்ணீர்... - சமந்தா காண்ணீர்

சமந்தா-நாக சைதன்யா ஜோடி பிரிந்ததாக அறிவித்துள்ள நிலையில், சமந்தா ரூ.200 கோடி ஜீவனாம்சம் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

samantha
samantha

By

Published : Oct 2, 2021, 9:02 PM IST

Updated : Oct 2, 2021, 9:29 PM IST

திரை நட்சத்திரங்கள் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பல படங்களில் நடித்துவந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 2010 முதல் 7 ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

நான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. அப்படிதான் இருவரின் நடவடிக்கைகளும் இருந்தன. ஆனால், கடந்த சில வாரங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து சமந்தாவிடம் திருப்பதி கோயிலில் வைத்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சமந்தா தனது அதிருத்தியை தெரிவித்திருந்தார். இதையடுத்து சமந்தா, தன்னையும், தனது கணவர் நாக சைதன்யா குறித்தும் தவறான கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்தார்.

இதனைக்கொண்டு, இருவருக்கும் இடையே மனக் கசப்பு இல்லை என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் இன்று அதிகாரப்பூர்வமாக தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவன் - மனைவி உறவில் இருந்து பிரியப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த அறிக்கை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே நாக சைதன்யா ரூ.200 கோடி ஜீவனாம்சம் கொடுக்க முன்வந்ததாகவும், இதற்கு சமந்தா மறுப்பு தெரிவித்தாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:11 வருட காதல்... ஐந்தாண்டு இல்லறம்: முடிவுக்கு வந்த உறவு

Last Updated : Oct 2, 2021, 9:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details