தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

96 ரீமேக் முடிந்தது - டாட்டா சொன்ன சமந்தா! - த்ரிஷா ஜானு

சர்வானந்த், சமந்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘96’ பட ரீமேக்கின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

Samantha Akkineni wrap up 96

By

Published : Oct 14, 2019, 5:25 PM IST

Updated : Oct 14, 2019, 9:21 PM IST

பிரேம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான ‘96’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றியடைந்தது. இந்தத் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை அதன் ரசிகர்கள் சமீபத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர். இயக்குநர் பிரேம் இந்தப் படத்தை தெலுங்கில் இயக்கப் போவதாக அறிவித்தார். சமந்தா, சர்வானந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். தற்போது இந்தப் படப்பிடிப்பு முடிந்து, வெளியாக தயார் நிலையில் உள்ளது.

Samantha Akkineni wrap up 96

இது குறித்து சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், படப்பிடிப்பு முடிந்தது! மற்றொரு முக்கியமான திரைப்படம் நேற்றைவிட சிறப்பாக செயல்பட சவாலாக இருந்த கதாபாத்திரம். இயக்குநர் பிரேம், உடன் நடித்த சர்வானந்த் இருவருக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Oct 14, 2019, 9:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details