தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

”விதிகளை உடைத்து புதிய விஷயங்களை பரிசோதித்துப் பார்த்திருக்கிறேன்” - நடிகை சமந்தா - தி ஃபேமிலி மேன் சீசன் 2

புதுடெல்லி : 'தி ஃபேமிலி மேன்' சீசன் 2 தொடரில் பல விதிகளை உடைத்திருப்பதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

Samantha
Samantha

By

Published : Nov 17, 2020, 5:25 PM IST

அமேசான் ப்ரைமில் கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், ஒளிபரப்பான தி ஃபேமிலி மேன் முதல் சீசனில் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் - பிரியாமணி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆக்‌ஷன் கலந்த குடும்பக் கதையாக அமைந்திருந்த இந்தத் தொடர், 10 பகுதிகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்தி மொழியில் வெளியான இத்தொடரின் இரண்டாவது சீசனில் சமந்தா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் சமந்தா வெப் சீரிஸில் அறிமுகமாகிறார்.

முதல் சீசனில், ஷரிப் ஹாஷ்மி, நீரஜ் மாதவ், பவன் சோப்ரா, கிஷோர் குமார் மற்றும் குல் பனாக் ஆகியோரும் நடித்திருந்தனர். இயக்குநர்கள் ராஜ் நிடிமோரு - கிருஷ்ணா டி.கே ஆகியோர் இயக்கிய இந்தத் தொடர், தேசியப் புலனாய்வு அமைப்பில் ரகசியமாகப் பணிபுரியும் ஒரு நடுத்தர வர்க்க மனிதனைப் பற்றிய கதையாகும்.

முன்னதாக இத்தொடரின் இரண்டாவது சீசனின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவுபெற்றது. இதன் இறுதிக்கட்ட பணிகள் கிட்டதட்ட முடியும் நிலையில் உள்ளன. இந்நிலையில், இந்த வெப் சீரிஸில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார். அதில், “விதிகளை உடைக்கும் வாய்ப்பை ஓடிடி எங்களுக்குத் தருகிறது. தி ஃபேமிலி மேன் தொடரில் நான் பல விதிகளை உடைத்திருக்கிறேன். பல புதிய விஷயங்களை பரிசோதித்துப் பார்த்திருக்கிறேன்.

இந்த சீஸனில் நடித்ததிலும் அதன் இறுதி வடிவத்தைப் பார்த்ததிலும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். என்னை ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்து பழக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் இது ஒரு நல்ல ஆச்சரியமாக இருக்கும்.

ஓடிடி ஒவ்வொரு கலைஞருக்கும் புதிய சாத்தியங்கள் நிறைந்த உலகத்தை அறிமுகம் செய்துள்ளது. திரைப்படங்கள் என்று வரும்போது ஒரு நடிகர் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியான குறிப்பிட்ட வகையான கதாபாத்திரங்களிலேயே நடிக்க வேண்டியிருக்கும். ஆனால் ஓடிடியில் பரிசோதனைகள் செய்து பார்க்க முடியும்” என்றார்.

திரைத்துறையில் பெண்களுக்கான இடம் மாறியிருக்கிறதா என்ற கேள்விக்கு சமந்தா கூறியதாவது, ”திரைத்துறைக்கு நான் வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் வந்த காலத்துக்கும் இப்போதைய காலத்துக்கும் மிகப்பெரிய அளிவில் மாற்றங்கள் நடந்துள்ளன.

உலக சினிமா அறிமுகம், ஓடிடி தளங்களில் வருகை எனப் பெண்களுக்கான வாய்ப்புகளும் தேர்வுகளும் நிலையாக அதிகரித்து வருகின்றன. முன்னைப் போல ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் எங்களை நடிக்க அழைப்பதில்லை” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details