தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'நீங்கள் இன்னும் சிறக்க வேண்டும்' - நயன்தாராவை வாழ்த்திய சமந்தா - நயன்தாராவின் நெற்றிக்கண் டீசர்

தென்னிந்திய 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு சமந்தா ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

nayanthara
nayanthara

By

Published : Nov 18, 2020, 5:28 PM IST

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாகவும் அதிக சம்பளம் பெறும் நாயகியாகவும் வலம் வரும் நயன்தாரா இன்று (நவம்பர் 18) தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை சமந்தா நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவிக்கும்விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில், "நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டே இருங்கள். நம்முடையது எதுவே அதற்காகப் போராட வேண்டும் என்பதற்கு ஊக்கமாக இருங்கள்.

நீங்கள் இன்னும் சிறக்க வேண்டும். உங்கள் வலிமைக்கும் அமைதியான உறுதி நிலைக்கும் என் வணக்கங்கள்" என பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'காத்துவாக்குல இரண்டு காதல்' படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் சமந்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகிவரும் 'நெற்றிக்கண்' படத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details