தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாரிஸில் படமாக்கப்பட்ட ’சாமஜவரகமனா’ பாடல்! - திரிவிக்ரம்

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் ‘அலா வைகுந்தபுரமுலோ’ படத்தின் ’சாமஜவரகமனா’ பாடல் பாரிஸில் படமாக்கப்பட்டு வருகிறது.

Allu arjun

By

Published : Nov 6, 2019, 5:47 PM IST

திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அலா வைகுந்தபுரமுலோ’. இதில் ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் டோலிவுட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ‘ராமுலோ ராமுலா’ எனும் பாடல், தென்னிந்திய பாடல்களில் 24 மணி நேரத்துக்குள் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்ற சாதனையை பெற்றது. அதேபோல் ’சாமஜவரகமனா’ எனும் பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சீதாராம சாஸ்திரி எழுதிய ’சாமஜவரகமனா’ ( Samajavaragamana ) பாடலை இதுவரை 6 கோடி முறை பார்க்கப்பட்டு, 8 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலை பாரிஸில் படமாக்கி வருகிறார் இயக்குநர் திரிவிக்ரம். சங்கராந்தியையொட்டி (ஜனவரி 12) இத்திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details