லாஸ் ஏஞ்சல்ஸ்: ரசிகர்களை பயத்தில் உறைய வைத்த திகில் திரைப்படமான 'ஈவில் டெட்' படத்தின் புதிய கதையை உருவாக்கி வருவதாக இயக்குநர் சாம் ராய்மி தெரிவித்துள்ளார்.
1980களில் வெளியான திகில் படங்களில் ரசிகர்களை பயத்தால் உறைய வைத்த படம் 'ஈவில் டெட்'. விடுமுறையைக் கொண்டாட காட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் தனிமையான வீட்டுக்கு செல்லும் கல்லூரி நண்பர்களுக்கு நிகழும் அமானுஷ்ய நிகழ்வுகளும், அவர்களுக்கு ஏற்படும் கோரமான முடிவுகளும்தான் படத்தின் கதை.
இந்தப் படத்தில் இடம்பெற்ற திகில் காட்சிகள் ஒவ்வொன்றும் பார்வையாளர்களை பயத்தில் மிரள வைக்கும் விதமாக அமைந்திருக்கும். தற்போது கான்ஜுரிங், அன்னபெல் தொடங்கி கோலிவுட்டில் காஞ்சனா பேய் வரை ஏராளமான பேய் படங்களை ரசிகர்கள் பார்த்து பழகிவிட்டாலும், 'ஈவில் டெட்' தரும் திரில் அனுபவம் வித்தியாசமாகவே இருக்கும்.
சிறந்த ஹாரர் பட லிஸ்டில் தவறாமல் இடம்பெறும் இந்தப் படத்தின் புதிய கதையை உருவாக்கி வருவதாக அதன் இயக்குநர் சாம் ராய்மி தெரிவித்தார்.