உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் மிக முக்கிய அங்கமாக மாறியுள்ளன. ஒரு சில நேரத்தில் சமுக வலைதளங்கள் தொழில்நுட்பக் கோளரறு காரணமாக முடங்குகின்றன.
அதன்படி நேற்றிரவு (அக்.4) தொழில்நுட்பக் கோளரறு காரணமாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது. இதனையறியாத சிலர் நமது செல்போனில் தான், சிக்னல் இல்லை என நினைத்தனர்.
அதேபோன்று தான் இசையமைப்பாளர் சாம் சி.எஸும் நினைத்தார் போல. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மன்னித்துவிடு ஏர்டெல், கொஞ்சம் சந்தேகப்பட்டுடேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் வெளியிட்ட பதிவு இதற்குப் பதிலளித்த ஏர்டெல் நிறுவனம், "பரவாயில்லை சாம். நம் மனம் எதைப்பற்றி அடிக்கடி சிந்திக்கிறதோ, அதை உள் மனம் சந்தேகங்களையும் கேள்விகளையும் தூண்டும் நீங்கள் எங்களைப் பற்றி நினைத்ததில் மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு இன்று (அக்.6) அதிகாலை சரி செய்யப்பட்டு மீண்டும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் செயல்பட தொடங்கின. இதனால் சுமார் ஆறுபில்லியன் டாலர்கள் இழந்ததாக மார்க் சூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:அடுத்தடுத்து வெளியாகும் விஜய்யின் 'பீஸ்ட்' ஹாட்ரிக் அப்டேட்?