தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சல்மான் கானின் 'பாரத்' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு - தபு

அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள 'பாரத்' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

பாரத்

By

Published : Apr 23, 2019, 10:11 AM IST

'ஆன் ஓட் டு மை ஃபாதர்' ('An Ode To My Father') என்கிற கொரிய படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக உருவாகி வரும் படம் 'பாரத்'. இப்படத்தை 'டைகர் ஜிந்தா ஹை' பட இயக்குநர் அலி அப்பாஸ் ஜாஃபர் சல்மான்கானை வைத்து இயக்குகிறார்.

இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக கேத்ரீனா கைஃப் நடித்துள்ளார். மேலும் தபு, திஷா பதானி, ஜாக்கி ஷெராஃப், உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இளமைக் கால சல்மான், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வயதான தோற்றத்தில் சல்மான், என அசத்தலான தேற்றத்தில் 'பாரத்' என்கிற கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் உயிரைப் பணயம் வைத்து சர்க்கஸில் மோட்டார் பைக் ஓட்டுவதில் இருந்து, இந்திய கப்பல் படையில் வேலை செய்வது என பல பரிமாணங்களில் சல்மான் கான் அசத்தியுள்ளார்.

இப்படம் வரும் ஜூன் மாதம் 5-ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details