தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சல்மான்கானின் ராதே ரிலீஸ் தேதி வெளியீடு! - ராதே பட அப்டேட்

நடிகர் சல்மான் கான் நடித்துள்ள 'ராதே' படம் 2020 ஈகை திருநாளில் வெளியாகிறது.

சல்மான்கானின் ராதே ரிலீஸ் தேதி வெளியீடு
சல்மான்கானின் ராதே ரிலீஸ் தேதி வெளியீடு

By

Published : Mar 1, 2020, 10:15 AM IST

'தபாங் 3' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சல்மான் கான்-பிரபு தேவா இணைந்துள்ள படம் 'ராதே'. திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஜாக்கி ஷெராஃப், ரந்தீப் ஹூடா, சோஹேல் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சல்மான் கான் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 'ராதே' திரைப்படம் இந்த ஆண்டு ஈகைத் திருநாளன்று வெளியாகிறது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் வெளியிட்டுள்ள அந்தப் போஸ்டரில் சல்மான் கான், கறுப்பு உடை அணிந்து ஸ்டைலாக காட்சியளிக்கிறார்.

முன்னதாக சலமான் கான் நடிப்பில் வெளியான 'தபாங்' (2010), 'ஏக் தா டைகர் ' (2012), பஜ்ரங்கி பைஜான் (2015), சுல்தான் (2016) ஆகிய படங்கள் ஈகைத் திருநாளன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:லிம்கா ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்

ABOUT THE AUTHOR

...view details