பாலிவுட்டில் 1998ஆம் ஆண்டு வெளியான 'ஹம் சாத் சாத் ஹைன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, நடிகர் சல்மான்கான் ஜோத்பூரின் கங்கனி கிராமத்தில் மான் வேட்டையாடினார்.
மான் வேட்டையாடிய சம்பவம்: நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக சல்மானுக்கு அழைப்பாணை! - deer hunt case and Arms Act case
நடிகர் சல்மான்கான் மானை வேட்டையாடிய சம்பவம் தொடர்பாக அடுத்த மாதம் நீதிமன்றத்தில் முன்னிலையாக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
சல்மான் கான்
இது தொடர்பாக சல்மான்கான் மீது வழக்குத் தொடரப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு 20 ஆண்டுகளாக நடைபெறுகிறது. தற்போது இவ்வழக்கு ஜோத்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை அடுத்த மாதம் 29ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதனால் சல்மான்கான் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று மாவட்ட, நிலைய மாவட்ட நீதிபதி ராஜேந்திர கஸ்வாலின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.