தனது தபாங்-3 திரைப்படத்தின் புரமோஷன் வேலைக்காக ஹைதராபாத்தில் இருந்த நடிகர் சல்மான்கான், ஷாருக்கானுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்க முடியாததால் வித்தியாசமான முறையை கையாண்டிருக்கிறார்.
கிங் கானுக்கு வாழ்த்து தெரிவித்த சல்மான்கான்! - ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவித்த சல்மான் கான்
நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய கிங் கான் ஷாருக்கானுக்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்த நிலையில், நடிகர் சல்மான்கானும் தனது வாழ்த்தை வித்தியாசமான முறையில் கூறியிருக்கிறார்.
salman-khans-birthday-wishes-for-sharukh-khan
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாருக்கானுக்கு ஹேப்பி பர்த்டே பாடலை தபாங்-3 படக்குழுவினரான சோனாக்ஷி சின்ஹா, டேய்ஸி ஷா, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், மனிஷ் பால் உள்ளிட்டோருடன் பாடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.