திரையுலக பிரபலங்கள் பலரும் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்து தங்களது கருத்தை பதிவு செய்து வரும் நிலையில், நடிகர் சல்மான் கானும் தனது எதிர்ப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், 'மனித உருவில் இருக்கும் மிகமோசமான தீமை இது' என்று பதிவிட்ட சல்மான், 'நிர்பயா, பிரியங்கா ரெட்டி போன்ற பெண்களின் இந்த வலியும், துன்பமும், மரணமும் நம் அனைவரையும் ஒன்றிணைத்து அடுத்து எந்த பெண்ணும் பாதிக்கப்படும் முன்னர் இந்த சாத்தான்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.