இந்திய அளவில் தொலைக்காட்சிகளில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். முதன்முதலில் இந்தியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி, தற்போது 14 சீசன்களை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறது.
இதனையடுத்து இந்தியில் பிக்பாஸ் 15ஆவது சீசன் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் சல்மான் கானுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படவுள்ளது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் 15ஆவது சீசனை 14 வாரங்கள் தொகுத்து வழங்குவதற்காக மொத்தமாக சல்மான் கானுக்கு 350 கோடி ரூபாய் சம்பளம் வழங்க உள்ளனராம். இதனைக் கேட்ட நெட்டிசன்கள் என்னது 14 வாரங்களுக்கு 350 கோடியா என அதிர்ச்சிப் பதிவுகளைப் பகிர்ந்துவருகின்றனர்.
இதேபோல் தமிழில் பிக்பாஸ் 5ஆவது சீசனை தொகுத்து வழங்கும் கமல் ஹாசனுக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நதியா?