பாலிவுட்டில் 2010ஆம் ஆண்டு அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியான படம் 'தபாங்'. இப்படம் அப்போது பெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகமான 'தபாங் 2' படத்தை அர்பாஸ் கான் இயக்கினார்.
தற்போது இப்படத்தின் 3ஆம் பாகமான 'தபாங் 3' படத்தை நடிகர் சல்மான்கானை வைத்து பிரபுதேவா இயக்கிவருகிறார். ஷஜித் - வாஜித் பாடல்களுக்கு இசையமைக்க, சந்தீப் ஷிரோத்கர் பின்னணி இசையை கோர்க்க இருக்கிறார்.
இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக, படக்குழு அறிவித்துள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடும் உரிமையை கே.ஜே.ஆர். பட நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளதாக சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். சமீபத்தில் சுதீப் நடிப்பில் வெளியான 'பயில்வான்' திரைப்படம் வெற்றி பெற சல்மான்கான் 'சுல்தான்' படக்குழு சார்பாக வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிங்க: 'ஜல்லிக்கட்டு காளை ரெடி' - தமிழில் பேசிய சல்மான் கான்!