தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரோனா எதிரொலி: ஒரு லட்சம் குடும்பங்களுக்கு உதவி செய்த சல்லு பாய் - பாலிவுட் செய்திகள்

ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் குடும்பங்களுக்கு நடிகர் சல்மான் கான் உணவு பொருட்கள் கொடுத்து உதவி செய்துள்ளார்.

சல்லு பாய்
சல்லு பாய்

By

Published : Apr 30, 2020, 4:33 PM IST

கரோனா வைரஸ் காரணமாக வரும் மே மூன்றாம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு துறைகள் நஷ்டம் அடைந்துள்ளன. கோவிட்-19 காரணமாக பலரும் வேலைக்குச் செல்லாமல், தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அவ்வாறு தவிக்கும் மக்களுக்குப் பலரும் தங்களால், முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் சல்மான்கான் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியவாசியப் பொருட்களை, தனது நண்பர்களுடன் இணைந்து வழங்கியுள்ளார். இதுவரை 1,25,000 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் கொடுத்து உதவி செய்துள்ளார். மேலும் இதற்குப் பெயர் ’Anna Daan' சேலஞ்ச் என்றும், அனைவரும் இந்த சேலஞ்சை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு சேலஞ்ச் ட்ரெண்டாவது வழக்கமாக நடைபெறுகிறது. ஆனால், அவை அனைத்துமே பயனுள்ளதாக இருப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தல ரசிகர்களை ஏமாற்றிய தயாரிப்பாளர் போனி கபூர்!

ABOUT THE AUTHOR

...view details