பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான் கான் தற்போது 'தபாங்' படத்தின் மூன்றாம் பாகமான 'தபாங்-3' யில் நடித்துள்ளார். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் புரோமோஷன் வேலைகளும் துரிதமாக நடைபெற்றுவருகிறது.
'தபாங்-3' திரைப்படத்தின் புரோமோஷனுக்காக, சென்னையிலுள்ள தனது தென்னிந்திய ரசிகர்களுடன் காணொலி கலந்தாய்வு மூலம் சல்மான் கான் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது தென்னிந்திய உச்சபட்ச நட்சத்திரங்களான ரஜினி, அஜித், விஜய், விக்ரம் போன்ற நடிகர்களின் படங்கள், தற்போது பாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருவதாகக் கூறினார்.