தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பாலிவுட் டைகர்' இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடருபவர்களின் எண்ணிக்கை உயர்வு - சல்மான் கான் புதியபடம்

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடருவரின் எண்ணிக்கை 30 மில்லியனாக அதிகரித்துள்ளது.

Salman Khan
Salman Khan

By

Published : Mar 1, 2020, 3:36 PM IST

பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் சல்மான் கான். 54 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் 'தி மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர்' என்ற அந்தஸ்துடன் வாழ்ந்து வருகிறார்.

'பாலிவுட்டின் டைகர்' என அழைக்கப்படும் இவர் சினிமாவில் மட்டுமல்லாது தொலைக்காட்சி நிகழ்ச்சியல் நடுவராகவும் இருந்து வருகிறார்.

இதை தவிர தினந்தோறும் கடினமான உடற்பயிற்சிகள் செய்து வருவதை சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு இளம் தலைமுறைக்கு சவால்விடுத்து வருகிறார்.

இவர் சமூகவலைதளத்தில் வெளியிடும் வீடியோக்கள் பெரும் பாலும் வைரலாகும். இந்நிலையில், சல்மான் கானின் இன்ஸ்டாகிராம் பின் தொடருவரின் எண்ணிக்கை தற்போது 30 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சல்மான் கான் வெளியிட்டுள்ள வீடியோ சில நிமிடங்களில் சமூகவலைதளத்தில் வைரலானது. மேலும் 30 மில்லியன் ரசிகர்களுக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.சல்மான் கான் தற்போது 'ராதே', 'கபி ஈத் கபி தீபாவளி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details