தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கேஜிஎப் இயக்குநர் - பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் ‘சலார்’ - பூஜையுடன் தொடக்கம்! - சலார்

‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு வெளியான ‘சாஹோ’ பிரபாஸ்க்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற்றுத் தரவில்லை. சினிமா ரசிகர்களின் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது.

Salaar Saga Begins - yash and prabhas in hyderabad
Salaar Saga Begins - yash and prabhas in hyderabad

By

Published : Jan 15, 2021, 4:56 PM IST

ஹைதராபாத்: பிரசாந்த் நீல் - பிரபாஸ் கூட்டணியில் உருவாகவுள்ள ‘சலார்’ படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியது.

கேஜிஎப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து இயக்குகிறார். ‘சலார்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பணிகள் இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. இந்த விழாவில் கேஜிஎப் புகழ் யஷ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இதில் கலந்துகொண்டதற்காக யஷ்ஷுக்கு நன்றி தெரிவித்து பிரபாஸ் ட்வீட் செய்துள்ளார். இந்தப் படத்தில் தனது கதாபாத்திரம் மிகுந்த வன்முறை நிறைந்ததாக இருக்கும் என பிரபாஸ் முன்பே தெரிவித்திருந்தார்.

‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு வெளியான ‘சாஹோ’ பிரபாஸ்க்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற்றுத் தரவில்லை. சினிமா ரசிகர்களின் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. இதனால் வருத்தத்தில் இருந்த பிரபாஸ் ரசிகர்களுக்கு கேஜிஎப் இயக்குநருடன் பிரபாஸ் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேஜிஎப் 2’ வெகு விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details