தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பத்திரிகையாளராக அவதாரம் எடுக்கும் சாக்‌ஷி அகர்வால் - பத்திரிகையாளர் வேடத்தில் சாக்‌ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாகிகளுள் ஒருவராகத் திகழும் நடிகை சாக்‌ஷி அகர்வால், கதாநாயகியை மையப்படுத்திய கதையில் பிரதான கேரக்டராக தோன்றவுள்ளார்.

Sakshi Agarwal turn as journalist in women centric film titled as Puravi
Actress Sakshi Agarwal

By

Published : Mar 14, 2020, 11:34 PM IST

சென்னை: கதாநாயகியை மையப்படுத்திய கதையம்சத்தில் உருவாகும் படத்தில் பத்திரிகையாளராகத் தோன்றவுள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் ரசிகர்களை கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் சாக்‌ஷி அகர்வால். ராஜா ராணி, காலா, விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாகத் தோன்றிய இவர், தற்போது கதாநாயகியை மையப்படுத்திய கதையம்சத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார்.

புரவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் டிஜே சத்யா இயக்குகிறார். படத்தில் பத்திரிகையாளராக நடிக்கிறார் சாக்‌ஷி அகர்வால். புரட்சிமிக்க பெண்ணாகவும், சமூகத்துக்காகக் குரல் கொடுப்பவராகவும் அவர் தோன்றவுள்ளாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 14) தொடங்கியுள்ளது. கர்நாடக மாநிலங்களில் பல்வேறு பகுதிகளிலும், திருச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ஒரே ஷெட்யூலில் முழுப்படத்தையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.

சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ள ஆயிரம் ஜெண்மங்கள், டெடி ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த சாக்‌ஷி அகர்வால், தமிழில் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்.

அத்துடன் கடந்த ஆண்டு வெளியான ஆக்‌ஷன் படத்திலும், விரைவில் வெளியாகவிருக்கும் நிசப்தம் ஆகிய படங்களில் நாயகிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details