தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சீனத் தயாரிப்புகளை இனி உபயோகிக்கப் போவதில்லை' - டிக்டாக்கிலிருந்து விலகிய சாக்‌ஷி அகர்வால் - டிக் டாக்கில் இருந்து வெளியேறிய சாக்ஷி அகர்வால்

சென்னை: நடிகை சாக்‌ஷி அகர்வால் சீனாவைச் சேர்ந்த செயலியான டிக்டாக்கிலிருந்து விலகியதையடுத்து, இனி எந்த சீனத் தயாரிப்புகளையும் பயன்படுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

நடிகை சாக்ஷி அகர்வால்
நடிகை சாக்ஷி அகர்வால்

By

Published : Jun 21, 2020, 2:14 AM IST

Updated : Jun 21, 2020, 6:29 AM IST

இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் ஜூன் 16ஆம் தேதி இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தச் சூழலில் சீனப் பொருள்களைத் தடைசெய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் கொடுத்துவருகின்றனர்.

குறிப்பாக, சீனாவின் ஐம்பதுக்கும் மேற்பட்ட செயலிகள் இந்தியாவில் அதிகம் உபயோகிக்கப்படுவதால், அவற்றையும் உபயோகிக்க வேண்டாம் எனவும் கூறிவருகின்றனர். இந்நிலையில், இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகை சாக்‌ஷி அகர்வால், தான் உபயோகித்துவந்த சீன செயலியான டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால், சீனா அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்கப் பார்க்கிறது. எனவே, நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருள்களை உபயோகப்படுத்தப் போவதில்லை. சீனத் தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிக்கப்போவதும் இல்லை.

இதன் தொடக்கமாக, நான் எனது டிக்டாக் கணக்கை டெலிட் செய்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை எனது நாடுதான் எனக்கு முதன்மை. என் நாட்டின் கண்ணியத்தைத் காக்க ஒரு குடிமகளாகச் செய்ய வேண்டியதைச் செய்ய நான் ஒருபோதும் தயங்கமாட்டேன்” எனக் கூறினார்.

Last Updated : Jun 21, 2020, 6:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details