ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் 'டெடி' படத்தின் படப்பிடிப்பில் சாக்ஷி அகர்வால் கலந்து கொண்டார்.
தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'மகாமுனி', 'காப்பான்' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதிலும் 'மகாமுனி' திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த ஆர்யா, தனது மாறுபட்ட நடிப்பின் மூலமாக அனைத்து விதமான சினிமா ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார்.
எப்போதும் கலகலப்பான மனோபாவம் கொண்ட நடிகர் ஆர்யா, தனது திரையுலக நண்பர்களுடன் எளிமையாக பழகக் கூடியவர். அதுமட்டுமில்லாமல் சில சமயங்களில் அவர்களுடன் கேளிக்கைகளிலும் ஆர்யா ஈடுபடுவதுண்டு.