சென்னை: 'டெடி' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் காமெடி நடிகர் சதீஷை வெளுத்து வாங்கியுள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான சாக்ஷி அகர்வால் தற்போது பிஸியாக பல படங்களில் பணியாற்றிவருகிறார். இதையடுத்து 'டெடி' என்ற படத்தில் நடித்து வரும் இவர் அதன் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். அவருடன் காமெடி நடிகர் சதீஷும் படப்பிடிப்பு தளத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், தனது செல்போனில் பாடல் கேட்டுக்கொண்டிருந்த சதீஷ் அதை முணுமுணுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே சாக்ஷி வருவதைக் கண்ட அவர், உடனடியாக காமெடி நடிகர் செந்திலின் பிரபல காமெடியான ஹவா ஹவா என்று நகைச்சுவையாக பாடி அவரை கலாய்த்துள்ளார்.
இதைக்கண்டு கடுப்பான அவர், சதீஷை அடித்து வெளுத்து வாங்கியுள்ளார். இந்த வேடிக்கையான வீடியோவை ஷூட்டிங் ஸ்பாட் ஃபன் என்று நடிகர் சதீஷ் தனது ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் கிளாஸுக்குள் பேனாவை குறி பார்த்து எறிவது போன்ற வீடியோவை வெளியிட்டு சதீஷ் செய்த போங்கை மற்றொரு வீடியோவில் போட்டுடைத்தார் ஆர்யா. இதையடுத்து தற்போது அடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார் சதீஷ். இதற்கு பின்னணியில் என்ன இருக்கிறதோ?