பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான சாக்ஷி அகர்வால், தற்போது பிஸியாக பல படங்களில் பணியாற்றிவருகிறார். இவர் தற்போது 'மிருதன்', 'டிக் டிக் டிக்' உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சவுந்தர் ராஜன் இயக்கும் படம் 'டெடி' படத்தில் நடிக்கவுள்ளார். இதில் ஆர்யாவும் அவரது மனைவி சாயிஷாவும் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
எனக்கு தெரியும் கடவுளுக்கு எப்படி மரியாதை கொடுக்கனுன்னு - 'சின்டரெல்லா' சாக்ஷி அகர்வால் - சின்டரல்லா ரிலீஸ் தேதி
நான் அணிந்திருப்பது செருப்பு அல்ல, ஆங்கிள் சாக்ஸ். கடவுளுக்கு எப்படி மரியாதை கொடுப்பதென்று எனக்கு தெரியும் என நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.
'சாக்ஷி அகர்வால்' பிக்பாஸ் நிகிழ்ச்சிக்குப் பின் அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி, பிஸியான நடிகையாக மாறியுள்ளார். அதே வேளையில் விஷாலின் ’ஆக்ஷன்’ திரைப்படத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சின்டரெல்லா படத்தின் டப்பிங்கை பூஜையுடன் தொடங்கியுள்ளேன் என குறிப்பிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் அவர் காலில் அணிந்திருப்பது செருப்பு என அட்வைஸ் சொல்லக்கூடாது என, நான் அணிந்திருப்பது செருப்பு அல்ல, ஆங்கிள் சாக்ஸ். கடவுளுக்கு எப்படி மரியாதை கொடுப்பதென்று எனக்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.