தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சாக்ஷி அகர்வாலை தித்திக்கவைத்த ஸ்வீட் மனிதர் இவரா...! - ஜீவி பிரகாஷ்

நான் அடிப்படையில் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் உணர்வுகளை மிகச்சரியாக வெளிப்படுத்தும் படங்களுக்காக காத்திருக்கிறேன் என நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.

file pic

By

Published : May 19, 2019, 9:17 AM IST

'காலா' படத்தின் மூலம் அறிமுகமான சாக்ஷி அகர்வால் தற்போது பிஸியான நடிகையாக கோடம்பாக்கத்தில் வலம்வருகிறார்.

தற்போது, ராய் லட்சுமி நடிக்கும் 'சிண்ட்ரெல்லா', ஜீவி பிரகாஷ் நடிக்கும் காமெடி கலந்த ஹாரர் படத்திலும், ' திருமணம் என்னும் நிக்காஹ்' படத்தை இயக்கிய அணீஸ் இயக்கவிருக்கும் புதிய படத்திலும் சாக்‌ஷி அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சாக்ஷி அகர்வால்

இது குறித்து சாக்ஷி அகர்வால் கூறுகையில், ரஜினி சார் சினிமாவில் பெரிய அடையாளம். அவர் படம் மூலமாக எனக்கு ஒரு அடையாளம் வந்தது மகிழ்ச்சி. இப்போது கதையின் நாயகியாக சிண்ட்ரெல்லா படத்தில் ராய்லட்சுமியோடு இணைந்து நடித்தது நல்ல அனுபவம். நிச்சயம் என் கெரியரில் மைல்கல்லாக இப்படம் அமையும்.

எழில் சார் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் உடன் நடித்துவரும் ஹாரர் கலந்த காமெடி படமும் எனக்கு வேறொரு தளத்தை அமைத்துத் தரும்.

சாக்ஷி அகர்வால்

ஜீவி பிரகாஷ் போல ஒரு ஸ்வீட் மனிதரைப் பார்க்கவே முடியாது. படத்தில் நமக்கான இடத்தை அதிகப்படுத்தி அழகு பார்ப்பார். அவரோடு நடிக்கும் எல்லா நடிகைகளுக்கும் மீண்டும் அவரோடு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும்.

சாக்ஷி அகர்வால்

இயக்குநர் அணீஸ் சாரின் அடுத்தப்படத்தில் நான் ஹீரோயினாக இருப்பது மகிழ்ச்சி. நான் அடிப்படையில் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் உணர்வுகளை மிகச்சரியாக வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தரும் படங்களுக்காக காத்திருக்கிறேன்.

நிச்சயம் இந்த ஆண்டு எனக்கு தமிழ் சினிமாவில் முக்கியமான ஆண்டாக இருக்கும் என்றார். எழில் இயக்கி ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் சாக்‌ஷி அகர்வால் தாவணி கட்டிக்கொண்டு நெல்லைத் தமிழில் பேசி அசத்தி இருக்கிறாராம்.

சாக்ஷி அகர்வால்

ABOUT THE AUTHOR

...view details