'டைகர் ஜிந்தா ஹை', 'பாரத்', 'சுல்தான்' உள்ளிட்ட பிளாக்பஸ்டர் படங்களின் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் தற்போது சைஃப் அலிகானை வைத்து 'தந்தவ்' (Tandav) என்னும் அரசியல் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சைஃப் அலிகானுடன் டிம்பிள் கபாடியா, டிக்மான்ஷு துலியா, குமுத் மிஸ்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிஷன் மெஹ்ரா, ஜாபர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
அமேசான் ப்ரைமில் வெளியாகும் சைஃப் அலிகானின் 'தந்தவ்' - அமேசான் ப்ரைம்
மும்பை: நடிகர் சைஃப் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள 'தந்தவ்' திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.
Tandav
இந்தப் படம் அமேசான் ப்ரைமில் ஜனவரி 15ஆம் தேதி வெளியாகிறது. இதன் மூலம் அலி அப்பாஸ் ஜாபர் டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் டெல்லியில் உள்ள அதிகாரம், அவற்றுக்குள் நடக்கும் குழப்பங்கள் உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன.