தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவரது நடனத்திற்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
குறிப்பாக சாய் பல்லவி பட பாடல்கள் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தில் இணையத்தை கலக்கி வருகின்றன. இந்நிலையில் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள 'லவ் ஸ்டோரி' படத்தில் இடம்பெற்றுள்ள, ’சாரங்க தரியா’ பாடல் யூ-ட்யூப்பில் 300 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இந்தப் பாடலை மங்குலி பாடியுள்ளார்.