பிரேமம் படத்தில் வந்த காதல் காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் அவர் தற்போது இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார்.
மலர் டீச்சரை திருமணம் செய்கிறாரா ஏ.எல்.விஜய்?
செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே, படத்தில் நடித்து வரும் சாய்பல்லவி இயக்குநர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாய்பல்லவி
இந்நிலையில், இயக்குநர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த செய்தியை விஜய் தரப்பு மறுத்துள்ளது. இது வதந்தி என்றும் கூறியுள்ளனர். மேலும், இயக்குநர் ஏ.எல்.விஜய் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை 'தலைவி' என்ற பெயரில் இயக்கி வருகிறார். இப்படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.