தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அமானுஷ்யம் நிறைந்த கமர்சியல் திரைப்படம் 'அலறல்'! - அலறல் திரைப்பட அப்டேட்

சென்னை: 'அலறல்' திரைப்படத்தில் சாய் தீனா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

அலறல்
அலறல்

By

Published : Oct 2, 2020, 9:30 PM IST

'அலறல்' திரைப்படத்தின் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். இப்படத்தினை GD புரொடக்ஷன்ஸ், ஜீவேதா ஃபிலிம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது.

புதுமுகங்களாக நந்தினி கதாநாயகியாகவும், கிரி கதாநாயகனாகவும் மற்றொரு கதாநாயகியாக ஸாகித்யாவும், சாய் தீனா மாறுபட்ட இரட்டை வேடங்களிலும், குழந்தை நட்சத்திரங்களாக பேபி தன்யஸ்ரீ, மாஸ்டர் சுடர் நிலவன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர்களான ரூபநாதன், பாரூக் இயக்கியுள்ளனர். இப்படம் குறித்து இருவரும் கூறுகையில், “இந்தத் திரைப்படம் உண்மை சம்பவங்களின் தாக்கத்தில் பெண்ணியம், குழந்தை மனோதத்துவவியல் கருவாகக்கொண்டு திகில், அமானுஷ்யம் நிறைந்த கமர்சியல் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details