'பாகுபலி' படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நாயாகனாக நடித்துவரும் படம் 'சாஹோ'. சுஜித் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபாஸ்-க்கு ஜோடியாக ஷராதா கபூர் நடித்துள்ளார்.
இவர்களுடன் ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருண் விஜய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஷங்கர், இசான், லாய் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.