எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி, பாகுபலி-2 என இரண்டு பிரமாண்ட படங்களில் நடித்து உலகளவில் பெரிய கவனத்தைப் பெற்றவர் நடிகர் பிரபாஸ். தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த அவர், பாகுபலி படத்திற்கு பிறகு தேசிய நடிகராகவே மாறிவிட்டார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகி வரும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ரூ.300 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
பிரபாஸின் 'சாஹோ' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - ஷ்ரத்தா கபூர்
பாகுபலி-2 படத்தைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிக்கும் சஹோ படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியாகுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

sahoo movie
இப்படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர் நடித்துள்ளார். படத்தை சுஜித் இயக்குகிறார். இப்படம் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இதனை சமீபத்தில் வெளியான ஸ்நீக் பிக், மேலும் அதிகரித்துள்ளது. தற்போது பிரபாஸ் ரசிகர்களை குஷிப்படுத்தும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.