'பாகுபலி' படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்துவரும் படம் 'சாஹோ'. பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஷ்ரதா கபூர் நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஈவ்லின் சர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹாலிவுட்டுக்கே சவால் விடும் 'சாஹோ' ட்ரெய்லர்! - பிரபாஸ்
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'சாஹோ' படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிவரும் இந்தப் படத்தை யூவி என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருண் விஜய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சுஜீத் எழுதி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.
படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. ஆங்கில படத்திற்கு இணையாக இப்படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தை கலக்கிவருகிறது. இதனால் படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.