தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காதல் சைக்கோவான பிரபாஸ்..! -'சாஹோ' சிங்கிள் ட்ராக் அப்டேட்! - பாடல் டீசர்

பிரமாண்ட பட்ஜெட்டில் பிரபாஸ் நடித்து வரும் 'சாஹோ' படத்தில் இடம்பெற்றுள்ள 'காதல் சைக்கோ' எனும் பாடல் ஜூலை 8ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சாஹோ

By

Published : Jul 6, 2019, 11:13 PM IST

பாகுபலி, பாகுபலி-2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் 'சாஹோ'. சுமார் 150 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தை இயக்குநர் சுஜித் இயக்கி வருகிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர், ஷாக்கி ஷெராஃப், கத்தி பட வில்லன் நெய்ல் நிதின் முகேஷ், அருண் விஜய், முரளி சர்மா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். பிரமாண்ட பொருடசெலவில் ஹாலிவுட் தரத்திற்கு தயாராகி வரும் இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

பாகுபலி, பாகுபலி -2 படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபாஸிற்கு இந்தியா தவிர உலகம் முழுவதிலும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஆக்சன் காட்சிகள் நிறைந்த டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சண்டை காட்சிக்கு என்றே பிரமாண்ட செட் அமைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், 'சாஹோ' படத்தில் இடம்பெற்றுள்ள 'காதல் சைக்கோ' பாடலின் டீசர் வெளியாகியுள்ளது.

ஷ்ரத்தா கபூர் கவர்ச்சியான நடனத்தில் பிரபாஸை பார்த்து காதல் சைக்கோ என பாடுகிறார். காதல் சைக்கோ முழு பாடல் ஜூலை 8ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 'சாஹோ' பட பணிகள் முடியும் தருவாயில் இசையமைப்பாளர்கள் ஷங்கர் இசான் லாய் திடீரென விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது. 'காதல் சைக்கோ' பாடலுக்கு தனிஷ்க் பாக்சி இசையமைக்க த்வானி பானுஷாலி பாடியுள்ளார்.

மேலும், 'சாஹோ' திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் வெளியாவதால் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details