சென்னை: காதலுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட மாடலும் நடிகையுமான எவிலின் ஷர்மா அந்த ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
2012இல் வெளியான ஃபிரைம் 'சிட்னி வித் லவ்' என்ற படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எவிலின் ஷர்மா. மே தேரா ஹீரோ, குச் குச் லோச்சா ஹே, இந்தி மீடியம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர் சாஹோ படத்தில் ஜெனிஃபர் என்ற கதாபாத்திரத்தில் தோன்றினார்.
சாஹோ படத்தில் எவிலின் ஷர்மா இந்த நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல பல் அறுவை சிகிச்சை நிபுணரான துஷன் பிண்டி என்பவருடன் கடந்த ஓராண்டு காலமாக டேட்டிங்கில் ஈடுபட்டுவந்தார். இதையடுத்து தற்போது அவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள எவிலின் ஷர்மா, புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
சிட்னியிலுள்ள துறைமுக பாலத்தில் இருவரும் லிப்-கிஸ் செய்தவாறு தங்களது காதல் தருணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.