கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள 'கிருமி சம்ஹார சூக்தம்' மத்திரத்தை அவசியம் கேளுங்கள் என எஸ்.வி. சேகர் ட்வீட் செய்துள்ளார்.
உலகை அச்சுறுத்திவரும் கரோனா தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை 562 பேர் பாதிப்பிக்குள்ளாகியுள்ளனர். இந்தியாவில் கரோனா பாதிப்பை எதிர்கொள்ள 21 நாள்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில அரசுகளும் சுகாதாரத் துறையில் பிரதான கவனம் செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று குறித்து சமூக வலைதளத்தில் பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் கரோனா தொற்று 23 பேரை பாதித்துள்ளது.
இதனையடுத்து கரோனாவிலிருந்து தப்பிக்க இந்த மந்திரத்தை தினமும் கூறுங்கள் என்று எஸ்.வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அதர்வண வேதத்தில் உள்ள 'கிருமி சம்ஹார சூக்தம்'. அவசியம் கேளுங்கள். இந்த மந்திர சத்தம் வீட்டில் ஒலிக்கட்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.