தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆரின் 'RRR' வெளியாகும் தேதி - படக்குழுவின் புதிய அப்டேட் - 'பாகுபலி 2

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் 'RRR'படம் வெளியாகும் அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

RRR
RRR

By

Published : Feb 5, 2020, 11:44 PM IST

'பாகுபலி 2' படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி இயக்கிவரும் படம் 'RRR'. அல்லூரி சீத்தாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் விடுதலை போராட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிவரும் இப்படம் பத்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் அஜய் தேவ்கான், ஆலியா பட் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். முன்னதாக இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது படத்தின் ஷூட்டிங்கில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் படம் 2021 ஜனவரி 8ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படம் மூலம் முதல்முறையாக ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்துள்ளதால் டோலிவுட் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

ABOUT THE AUTHOR

...view details