தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆர்ஆர்ஆர் ட்ரெய்லர்: பாகுபலி மேஜிக்கை மீண்டும் உருவாக்கிய ராஜமௌலி! - ஜூனியர் என்டிஆரின் ஆர்ஆர்ஆர் டிரெய்லர்

ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் ட்ரெய்லர் இன்று (டிசம்பர் 9) வெளியிடப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றான ஆர்ஆர்ஆர் ட்ரெய்லரில் பாகுபலி திரைப்படத்தின் மேஜிக்கை மீண்டும் புகுத்தியுள்ளார் ராஜமௌலி.

ஆர்ஆர்ஆர் டிரெய்லர்: பாகுபலி மேஜிக்கை மீண்டும் உருவாக்கிய ராஜமௌலி!
ஆர்ஆர்ஆர் டிரெய்லர்: பாகுபலி மேஜிக்கை மீண்டும் உருவாக்கிய ராஜமௌலி!

By

Published : Dec 9, 2021, 3:29 PM IST

ஹைதராபாத்: டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. அதன் பின்னர் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஆர்ஆர்ஆர் ட்ரெய்லரை இன்று வெளியிட்டனர்.

வெளியிடப்பட்ட நொடியிலிருந்தே ஆர்ஆர்ஆர் ட்ரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்து பாராட்டுகளை அள்ளிச் சென்றுள்ளது. திரைப்பட ட்ரெய்லரைப் பார்க்கும்போது,​பாகுபலி மேஜிக்கை வரவிருக்கும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் உருவாக்க எஸ்.எஸ். ராஜமௌலி முயன்றிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த பான் - இந்திய திரைப்படத்தை விளம்பரப்படுத்த அனைத்து வழிகளையும் பின்பற்றியுள்ள தயாரிப்பாளர்கள், ட்ரெய்லரின் வெளியீட்டில் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்ததில் வெற்றிபெற்றுள்ளனர்.

இத்திரைப்படமானது பிரிட்டிஷ் ராஜ் மற்றும் ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராகப் போராடிய, இரண்டு இந்திய புரட்சியாளர்களான அல்லூரி சீதாராம ராஜு, கொமரம் பீம் குறித்த புனைவுக் கதையே. இருவரும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றாலும், இருவரைச் சுற்றியும் ஒரு அழகான, ஆன்மாவைத் தூண்டும்விதத்திலான கதையை உருவாக்க முயற்சித்ததாக ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

ராம் சரண், ஜூனியர் என்டிஆரின் குருவாக அஜய் தேவ்கன் நடித்துள்ளார். ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட்டும், ஜூனியர் என்டிஆரின் காதலியாக பிரிட்டிஷ் நடிகை ஒலிவியா மோரிஸும் நடித்துள்ளனர். இப்படத்தில் ஸ்ரேயா சரண் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கிவுள்ளது.

வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி உலக அளவில் திரையரங்களில் வெளியிடப்படவுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க:இயக்குநர் தியாகராஜன் காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details