'பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர். ஆர். ஆர்).
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், அலீயா பட் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே எதிர்பாராத சில காரணங்களால் படத்தின் ட்ரெய்லர் அறிவித்த தேதியில் வெளியாகாது எனத் படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த டிரெய்லரின் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என படக்குழு சார்பில் கூறப்படுகிறது. இந்த செய்தி 'ஆர்.ஆர்.ஆர்' ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:RRR Movie - 15 நிமிடங்களுக்கு ஆலியா பட் வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?