சமூக இடைவெளியை முன்னிறுத்தும் விதமாக நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினருடன் வீடியோ கால் மூலம் மதன் கார்க்கி பேசியுள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆரின் தமிழுக்கு மதன் கார்க்கி ஆர்வம் - ராம்சரணின் பிறந்தநாள்
ஜூனியர் என்.டி. ஆரின் தமிழ் குரலை கேட்க மிகவும் ஆவலுடன் இருப்பதாக பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.
![ஜூனியர் என்.டி.ஆரின் தமிழுக்கு மதன் கார்க்கி ஆர்வம் Jr.NTR](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6566485-570-6566485-1585325424503.jpg)
Jr.NTR
மேலும் இதில் இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் ராஜமௌலி ஆகியோருடனும் பாடலாசிரியர் மதன் கார்க்கி வீடியோ கால் பேசினார்.
இது குறித்து மதன் கார்க்கி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இயக்குநர் ராஜமௌலி, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி ஆகியோருடன் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு வீட்டிலிருந்து வீடியோ கால் மூலமாக வேலைப்பார்க்கிறேன். ஜூனியர் என்.டி.ஆர் தமிழ் பேச மிக ஆர்வமும் கவனமுடனும் இருந்து வருகிறார். உங்களது தமிழ் குரலை கேட்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.