ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் 'RRR'. கரோனா சூழலால் ஒத்திவைக்கப்பட்ட இதன் படப்பிடிப்பு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது. தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு! - ராம் சரணின் புதியப்படம்
சென்னை: ராம் சரண் - ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகிவரும் 'RRR' படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சுதந்திர போராட்ட வீரர்கள் அல்லுரி சீதாராம ராஜூ, குமரம் பீம் ஆகிய இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து RRR' திரைப்படம் உருவாகிவருகிறது. சினிமா ரசிகர்கள் இந்தப் படத்தின் டீசரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், சமீபத்தில் படக்குழுவினர், கிளைமேக்ஸ் படப்பிடிப்பு தொடங்கியதை அறிவிக்கும் விதமாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தனர். இது ரசிகர்களிடையே படம் குறித்தான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இந்த நிலையில், இப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் 13ஆம்தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.