ஹைதராபாத்: எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள படம், 'ஆர்.ஆர்.ஆர்'. தெலுங்கு, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல பிராந்திய மொழிகளில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலக அளவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், இத்திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
படக்குழு ட்வீட்
ஒமைக்ரான் தொற்று பரவல், காரணமாகத் திரையரங்குகளுக்கு பல மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால், ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் குறித்த தேதியில் வெளியாகாமல், தள்ளிப்போகும் என தகவல் வெளியானது.
இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகாது என படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து, படக்குழு வெளியிட்டுள்ள ட்வீட்டில், "ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நலன்களையும் மனதில் வைத்து, படத்தைத் தள்ளிவைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
பொங்கலுக்கு 'வலிமை' மட்டுமே!
எங்கள் மீது எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அன்பு செலுத்தும் அனைத்து ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்.ஆர்.ஆர் இம்மாதம் வெளியாகாது என்பதால், தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு நடிகர் அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் மட்டுமே வெளியாகிறது. 'வலிமை' திரைப்படம் வரும் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போயஸ் கார்டனில் குவிந்த ரசிகர்கள் - வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்