'பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'ரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர். ஆர். ஆர்.) ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், அலீயா பட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘RRR’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் கேரக்டர் இண்ட்ரோ வெளியானது! இப்படத்தை டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. 'பாகுபலி' படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் 2021ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
அதிரடி கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர். இந்நிலையில், இப்படத்தில் ராமராஜு கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஜூனியர் என்.டி.ஆர். கதாபாத்திரத்தின் டீசர் இன்று (அக்.22) வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதனையடுத்து ’ஆர். ஆர். ஆர்.’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் கதாபாத்திரத்தின் இண்ட்ரோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் மாஸாக, கிளாசாக ஜூனியர் என்.டி.ஆர் காட்டியளிக்கிறார்.
’ஆர். ஆர். ஆர்.’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். கதாபாத்திர அறிமுக காணொளி! இப்படம் மூலம் முதல் முறையாக ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்துள்ளதால் டோலிவுட் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க...ஆர். ஆர். ஆர் படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஸ்ரேயா