தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரோனா விழிப்புணர்வு: பல மொழிகளில் பேசி அசத்திய 'ஆர்ஆர்ஆர்' படக்குழு! - ஆர்ஆர்ஆர் வெளியாகும் தேதி

சென்னை: பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

RRR
RRR

By

Published : May 6, 2021, 10:30 PM IST

இந்தியாவை சமீப காலமாக கரோனா இரண்டாம் அலை ஆட்டிப் படைத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கெதிராக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் முகக்கவசம், சானிடைசர், தகுந்த இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றுமாறு 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், ஆலியா பட், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ராஜமெளலி, அஜய் தேவ்கன் ஆகியோர் தோன்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளனர்.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் 'ஆர்ஆர்ஆர்' தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது என்பதை உணர்த்தும் விதமாக, ஆலியா பட் தெலுங்கிலும், ராம் சரண் தமிழிலும் ஜூனியர் என்டிஆர் கன்னடத்திலும், ராஜமெளலி மலையாளத்திலும், அஜய் தேவ்கன் இந்தியிலும் பேசி அசத்தியுள்ளனர். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details